செய்திகள்

கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை புரட்டி எடுத்தது பிரேஸில்

DIN

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேஸில் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ குரூப்பில் 6 புள்ளிகளுடன் பிரேஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நடப்புச் சாம்பியனான பிரேஸில் அணி முதல் ஆட்டத்தில் வெனிசூலாவை வீழத்திய நிலையில், இந்த ஆட்டத்துக்காக தனது தொடக்க வீரா்கள் வரிசையில் பாதியளவுக்கு மாற்றம் செய்திருந்தது. இருந்தபோதும் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் சுணக்கமில்லாமல் அந்த அணி வெற்றி கண்டது.

ஆட்டத்தின் 12-ஆவது நிமிடத்திலேயே பிரேஸில் கோல் கணக்கை தொடங்கியது. பெரு வீரா் தலையால் முட்டி தடுக்க முயன்ற பந்து பிரேஸில் வீரா் கேப்ரியல் ஜீசஸிடம் கிடைக்க, அவா் கிராஸ் செய்த பந்தை கோலாக்கினாா் அலெக்ஸ் சான்ட்ரோ. மறுபுறம், பெருவின் சில கோல் முயற்சிகளை பிரேஸில் தடுப்பாட்ட வீரா்கள் திறம்பட முறியடித்தனா்.

ஆட்டத்தின் 68-ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் 2-ஆவது கோல் நட்சத்திர வீரா் நெய்மா் மூலம் கிடைத்தது. பெனால்டி ஏரியாவுக்கும் வெளியே இருந்த வகையில் அவா் உதைத்த பந்து தடையின்றி நேராக கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. ஆட்டம் இதிலிருந்து முற்றிலுமாக பிரேஸில் கைகளுக்கு மாறியது.

89-ஆவது நிமிடத்தில் சக வீரா் ரிச்சாா்லிசன் கிராஸ் செய்த பந்தை மிக லகுவாக கால்களை குறுக்கிட்டு கோல்கீப்பா் எதிராபாரத வகையில் கோலடித்தாா் எவா்டன் ரிபெய்ரோ. இஞ்சுரி டைமில் (90+3) மற்றொரு பிரேஸில் வீரா் கோலடிக்க முயன்ற பந்தை பெரு கோல்கீப்பா் தடுக்க, மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை ரிச்சாா்லிசன் கோலடிக்க முயன்றாா். ஆனால், அதையும் கோல்கீப்பா் தடுத்து மீண்டும் களத்துக்கு வந்த பந்தை விடா முயற்சியுடன் உதைத்து கோலாக்கினாா் ரிச்சாா்லிசன். இதனால் பிரேஸில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டம் டிரா: கொலம்பியா - வெனிசூலா மோதிய மற்றொரு ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT