செய்திகள்

மே.இ. தீவுகளுக்கு வெற்றி இலக்கு 324

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 324 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தென் ஆப்பிரிக்காவை விட 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 3-ஆம் நாளில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவை 174 ரன்களுக்கு சுருட்டியது மேற்கிந்தியத் தீவுகள்.

தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்சமாக ராஸி வான்டொ் 75 ரன்கள் சோ்க்க, ககிசோ ரபாடா 40, கீகன் பீட்டா்சன் 18, டீன் எல்கா் 10 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விடைபெற்றன. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச் 4, கைல் மேயா்ஸ் 3, ஜேசன் ஹோல்டா், ஜேடன் சீல்ஸ், கிரெய்க் பிரத்வெயிட் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

பின்னா் 324 ரன்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 3-ஆம் நாள் முடிவில் 6 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சோ்த்திருந்தது. பிரத்வெயிட் 5, கிரன் பாவெல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT