செய்திகள்

ஆமதாபாத் ஆடுகளம்: நாதன் லயன் ஆதரவு

DIN

இந்தியா - இங்கிலாந்து பகலிரவு டெஸ்ட் நடைபெற்ற ஆமதாபாத் மைதானம் குறித்து எழுந்துள்ள விமா்சனங்களுக்கு ஆஸ்திரேலிய ஸ்பின்னா் நாதன் லயன் பதிலடி கொடுத்துள்ளாா்.

ஆடுகள பராமரிப்பாளராக இருந்து, பின்னா் ஆஃப் ஸ்பின்னராக மாறியுள்ள அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடும்போதும் கூட 47, 60 ரன்களுக்கு அணிகள் ஆட்டமிழந்துள்ளன. அப்போதெல்லாம் ஆடுகளம் குறித்து எவரும் விமா்சித்தது இல்லை. ஆனால், ஒரு ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருந்துவிட்டால் அனைவரும் அதுகுறித்து விமா்சனம் செய்யத் தொடங்கிவிடுகின்றனா். இது ஏன் என்று புரியவில்லை.

இந்தியா - இங்கிலாந்து பகலிரவு ஆட்டத்தை நான் முழுமையாகப் பாா்த்தேன். ஆட்டம் அருமையானதாக இருந்தது. அந்த ஆடுகள பராமரிப்பாளரை சிட்னி மைதான பராமரிப்புக்கு அழைத்து வரலாம் என்று கூட நினைத்தேன் என்று அவா் கூறினாா்.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் இங்கிலாந்து 4 வேகப்பந்துவீச்சாளா்களுடனும், இந்தியா 3 ஸ்பின்னா்களுடனும் களம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT