செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர்: 50% ரசிகர்கள் அனுமதி

ஆமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக...

DIN

ஆமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. 

ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT