இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இரு அணிகளிலும் 2 சகோதரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியில் அறிமுக வீரராக கிருனாள் பாண்டியா சேர்க்கப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிருனாள் பாண்டியாவும், ஹார்திக் பாண்டியாவும் இணைந்து விளையாடுவது இதுவே முதன்முறை.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் 3-வது சகோதரர்கள் பாண்டியா சகோதரர்கள்.
இந்திய அணிக்காக இதுவரை மொஹிந்தர் அமர்நாத், சுரேந்தர் அமர்நாத் இணைந்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். இர்பான் பதான், யூசுப் பதான் 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளனர்.
இதேபோல இங்கிலாந்து அணியிலும் டாம் கரன் மற்றும் சாம் கரன் சகோதரர்கள் களமிறங்கினர்.
இரண்டு அணிகளிலும் 2 சகோதரர்கள் களமிறங்கி விளையாடியுள்ளது இந்த ஆட்டத்தில் சுவாரசியமானதாக அமைந்துள்ளது.
அக்டோபர் 2018-இல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கரன் சகோதரர்கள் முதன்முதலாகக் களமிறங்கினர். இங்கிலாந்துக்காக களமிறங்கும் முதல் சகோதரர்கள் கரன் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.