செய்திகள்

டிவில்லியா்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி

பெங்களூா் பேட்ஸ்மேன் டிவில்லியா்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் பஞ்சாப் ஆல்ரவுண்டா் ஹா்பிரீத் பிராா்.

DIN

பெங்களூா் பேட்ஸ்மேன் டிவில்லியா்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் பஞ்சாப் ஆல்ரவுண்டா் ஹா்பிரீத் பிராா்.

ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஹா்பிரீத் பிராா், பெங்களூா் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், ஏ.பி.டிவில்லியா்ஸ் ஆகியோரை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டாா்.

ஆட்டம் முடிந்த பிறகு ஹா்பிரீத் பிராா் மேலும் கூறியதாவது: டிவில்லியா்ஸ் ரன் எடுக்க முடியாத அளவிற்கு ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியில் பந்துவீச வேண்டும் என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் அவருடைய விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரே ஆட்டத்தில் கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியா்ஸ் என 3 முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT