செய்திகள்

5-0: இந்தியாவின் வெற்றியைக் கணிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர்

சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள் அமைந்தால் இந்திய அணி 5-0 என இங்கிலாந்தை வெல்லும்...

DIN

சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்கள் அமைந்தால் இந்திய அணி 5-0 என இங்கிலாந்தை வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனீசர் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனீசர் கூறியதாவது:

ஆகஸ்ட் மாதம் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்தால் இந்திய அணி 5-0 என வெல்ல வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டுகளில் ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஆடுகளங்கள் காய்ந்த நிலையில் இருக்கும். அது இந்திய அணிக்குச் சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு| செய்திகள்: சில வரிகளில் | 3.10.25

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர்! புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள்!

அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு அரசியலில் நடித்து வருகிறார் விஜய் - அப்பாவு

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் Washing machine பாஜக! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT