ராம்குமார் 
செய்திகள்

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் ராம்குமார், சுமித் நாகல் வெற்றி; பிரஜ்னேஷ் தோல்வி!

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றிகளையும் பிரஜ்னேஷ் தோல்வியையும் அடைந்துள்ளார்கள்.

DIN

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் வெற்றிகளையும் பிரஜ்னேஷ் தோல்வியையும் அடைந்துள்ளார்கள்.

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று பாரிஸ் நகரில் தொடங்கவுள்ளது. 

சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா ரெய்னா என நான்கு இந்தியர்கள் பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்கள். 

நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அரினாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-6, 6-1, 6-4 என்கிற செட் கணக்கில் வென்றார் அங்கிதா. இன்று நடைபெறும் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் நாட்டின் கிரீட் மின்னன்னை எதிர்கொள்கிறார் அங்கிதா. தரவரிசையில் கிரீட் 125-வது இடத்திலும் அங்கிதா 182-வது இடத்திலும் உள்ளார்கள். 

ஆண்கள் பிரிவில் இரு இந்தியர்கள் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றிகளை அடைந்துள்ளார்கள். சுமித் நாகல், இத்தாலியின் ராபர்ட்டோவை 6-3, 6-3 என நேர் செட்களில் வென்றார். ராம்குமார், அமெரிக்காவின் மைக்கேலை 2-6 7-6(4) 6-3 என்கிற செட் கணக்கில் வென்றார். எனினும் மற்றொரு இந்திய வீரரான பிரஜ்னேஷ், 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆஸ்கரிடம் தோல்வியடைந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT