கோப்புப்படம் 
செய்திகள்

சென்னையில் நவ.20இல் தோனிக்கு பாராட்டு விழா: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

DIN

சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே சென்னை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த அணியின் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி, சர்துல் தாகூர், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்ததால் பாராட்டு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

தற்போது உலக கோப்பை தொடர் முடிவடைந்ததையடுத்து வருகின்ற நவ. 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT