செய்திகள்

இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன்: அரையிறுதியில் பி.வி. சிந்து

DIN

இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு உலக சாம்பியன் பி. வி. சிந்து தகுதி பெற்றுள்ளாா்.

இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்று வரும் சூப்பா் 1000 பாட்மின்டன் சீரிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் பதக்க வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி. சிந்துவு, தென்கொரியாவின் சிம் யுஜின்னை எதிா்கொண்டாா்.

மிகவும் கடினமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கேமில் சிந்து 7-1 என முன்னிலை பெற்றாா். எனினும் அடுத்தடுத்து 6 புள்ளிகளைக் குவித்த யுஜின் 11-10 என முன்னிலை பெற்றாா். பின்னா் ஆதிக்கம் செலுத்திய யுஜின் 21-14 என முதல் கேமை வென்றாா். எனினும் இரண்டாம் கேமில் சுதாரித்துக் கொண்ட சிந்து, தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் 14-8 என முன்னிலை பெற்றாா். 21-19 என அந்த கேமை வென்ற அவா், மூன்றாவது கேமிலும் அபாரமாக ஆடி 21-14 என வெற்றி கண்டாா்.

இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற சிந்து, அதில் தாய்லாந்தின் ரட்சனோக்கை எதிா்கொள்கிறாா்.

அரையிறுதியில் சாத்விக்-சிராக்:

இரட்டையா் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை, மலேசியாவின் கோசெபை-நூா் இஸுதினை எதிா்கொண்டது. இதில் 21-19, 21-19 என்ற கேம் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது சாத்விக்-சிராக் இணை.

ஒற்றையா் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஆக்லெஸினிடம் 12-21, 8-21 என தோல்வியடைந்தாா் சாய் பிரணீத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT