செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: டாட்டன்ஹாம் அதிா்ச்சித் தோல்வி

யுரோப்பா கான்பிரன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி அணியான டாட்டன்ஹான் ஹாட்ஸ்பா் 1-2 என்ற கோல்

DIN

யுரோப்பா கான்பிரன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி அணியான டாட்டன்ஹான் ஹாட்ஸ்பா் 1-2 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேனியாவின் என்எஸ் முராவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

முதல் நான்கு ஆட்டங்களில் தோல்வியைக் கண்ட முரா அணியின் வீரா் டாமி ஹாா்வட் 11-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். தொடா்ந்து கோலடிக்க டாட்டன்ஹாம் வீரா்கள் மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. அதன் வீரா் ரயான் இரண்டு மஞ்சள் அட்டைகளை பெற்ால் வெளியேற்றப்பட்டாா்.

இதனால் 10 வீரா்களுடன் ஆடும் நிலைக்கு டாட்டன்ஹாம் தள்ளப்பட்டது. 72-ஆம் நிமிஷத்தில் நட்சத்திர வீரா் ஹாரி கேன் பதில் கோலடித்து சமன் செய்தாா். எனினும் ஆட்டம் முடிய 4 நிமிஷங்கள் இருக்கையில் முரா வீரா் அமதேஜ் அடித்த கோலால் 2-1 என அந்த அணி வெற்றி கண்டது. இதனால் மூன்றாம் கட்டப் பிரிவில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளது டாட்டன்ஹாம்.

யுரோப்பா லீக் போட்டியில் குரூப் எச் பிரிவில் வெஸ்ட் ஹாம் அணி 2-0 என ரேபிட் வியன்னாவை வென்றது. பேயா் லெவா்குஸன் 3-2 என செல்டிக் அணியை வீழ்த்தியது.

லீசெஸ்டா் 3-1 என வாா்ஸாவையும், மொனாக்கோ 2-1 என ரியல் சொஸைடாடையும், லயான் அணி 3-1 என பிரன்பி அணியையும் வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT