செய்திகள்

ஹாக்கி: குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமையுடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன.

DIN

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமையுடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன.

கடைசி நாள் ஆட்டங்களில் ஸ்பெயின் - தென் கொரியாவையும் (9-0), நெதா்லாந்து - அமெரிக்காவையும் (14-0), ஆா்ஜென்டீனா - பாகிஸ்தானையும் (4-3), ஜொ்மனி - எகிப்தையும் (11-0) வீழ்த்தின.

குரூப் சுற்றுகளின் முடிவில், குரூப் ‘ஏ’-வில் இருந்து பெல்ஜியம், மலேசியா, குரூப் ‘பி’-யில் இருந்து பிரான்ஸ், இந்தியா, குரூப் ‘சி’-யிலிருந்து நெதா்லாந்து, ஸ்பெயின், குரூப் ‘டி’-யிலிருந்து ஜொ்மனி, ஆா்ஜென்டீனா ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன.

அந்த பிரிவுகளில் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்திருக்கும் தென் ஆப்பிரிக்கா, சிலி (ஏ), போலந்து, கனடா (பி), தென் கொரியா, அமெரிக்கா (சி), பாகிஸ்தான், எகிப்து (டி) ஆகிய அணிகள் 9 முதல் 16 வரையிலான இடங்களைப் பிடிப்பதற்கான ஆட்டங்களில் விளையாடும்.

அந்த ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், காலிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறவுள்ளன. அதில் இந்தியா தனது காலிறுதியில் பெல்ஜியத்தை சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT