கான்வே 
செய்திகள்

டெஸ்ட் தொடரில் இந்திய அணியைத் தோற்கடிப்பதே லட்சியம்: நியூசி. வீரர்

இந்தியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளோம்...

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது. கான்பூர், மும்பையில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி டிசம்பர் 7-ல் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் பற்றி நியூசி. வீரர் டெவோன் கான்வே பேட்டியளித்ததாவது:

இந்தியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளோம். இதை நாங்கள் அடையவேண்டும். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததை விடவும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானதாகும். அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இந்தத் தொடரில் எங்களை நிரூபிக்க முயல்வோம். இந்தியாவில் உங்கள் தடுப்பாட்டம் சிறப்பாக இருக்கவேண்டும். ரன்கள் எடுப்பதற்கான வழிமுறைகள் உங்களிடம் இருக்கவேண்டும். ரன்கள் எடுக்க முயற்சி செய்யாவிட்டால் சிக்கலாகிவிடும். ஒரு திட்டம் வகுத்து அதைப் பின்பற்றவேண்டும். இது மிகவும் சவாலானதாகும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT