செய்திகள்

ராகுல் திராவிட் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் பொறுப்புக்காக முன்னாள் வீரா் ராகுல் திராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளாா்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் பொறுப்புக்காக முன்னாள் வீரா் ராகுல் திராவிட் முறைப்படி விண்ணப்பித்துள்ளாா்.

டி20 உலகக் கோப்பை போட்டியுடன் ரவி சாஸ்திரியின் பொறுப்புக் காலம் நிறைவடையும் நிலையில், அடுத்து ராகுல் திராவிட் அந்தப் பொறுப்புக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ முறைப்படி மேற்கொள்வதன் அடிப்படையில் தற்போது திராவிட் விண்ணப்பித்துள்ளாா்.

தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவரது சகாக்களாக இருக்கும் பௌலிங் பயிற்சியாளா் பரஸ் மாம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளா் அபய் சா்மா ஆகியோா் ஏற்கெனவே தங்களது பணிக்காக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் விக்கெட் கீப்பா் அஜய் ராத்ராவும் ஃபீல்டிங் பயிற்சியாளருக்காக விண்ணப்பித்துள்ளாா்.

ராகுல் திராவிட் பயிற்சியாளா் ஆனதை அடுத்து, தற்போது அவா் வகித்து வரும் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவா் பதவிக்கு முன்னாள் வீரா் விவிஎஸ் லக்ஷ்மண் வரலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT