முகப்பு
செய்திகள்

தொடரும் பதக்க வேட்டை: பாராலிம்பிக்கில் 2வது பதக்கம் வென்றார் அவனி

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டாவது பதக்கமாக வெண்கலம் வென்று அவனி லெகாரா அசித்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
கோப்புப்படம்
பகிர்:

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டாவது பதக்கமாக வெண்கலம் வென்று அவனி லெகாரா அசித்தியுள்ளார்.

மகளிருக்கான 50மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்றைய போட்டியில் பங்குபெற்ற இந்தியாவின் அவனி, 445.9 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஏற்கனவே மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →