செய்திகள்

ஆகஸ்ட் மாத ஐசிசி விருது: பும்ரா, ரூட், அப்ரிடி பெயர்கள் பரிந்துரை

ஐசிசியின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஆகஸ்ட் மாத விருதுக்கு ஜாஸ்பிரீத் பும்ரா, ஜோ ரூட், ஷஹீன் அப்ரிடி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

DIN


ஐசிசியின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஆகஸ்ட் மாத விருதுக்கு ஜாஸ்பிரீத் பும்ரா, ஜோ ரூட், ஷஹீன் அப்ரிடி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மகளிர் கிரிக்கெட்டில் தாய்லாந்து வீராங்கனை நடாயா பூசாதம், அயர்லாந்து வீராங்கனைகள் கேபி லீவிஸ் மற்றும் எய்மர் ரிச்சர்ட்சன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பும்ரா:

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முகமது ஷமியுடன் இணைந்து பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்குத் தேவையான பாட்னர்ஷிப்பை அமைத்தார்.

ஷஹீன் அப்ரிடி:

கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசினார். 2006-க்குப் பிறகு சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஜோ ரூட்:

கடந்த மாதம் இந்தியாவுடனான முதல் மூன்று டெஸ்ட் ஆட்டங்களில் தலா ஒரு சதம் அடித்து ஐசிசி தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ஜோ ரூட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்: மாணவா்களுக்கு தில்லி முதல்வா் உறுதி

நங்கூரத் தோழமை!

உலா் கண் நோய் - விழிப்புடன் தவிா்ப்போம்!

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்!

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

SCROLL FOR NEXT