படம்: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 
செய்திகள்

பாகிஸ்தான் பயணம் ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

DIN


பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தன. அக்டோபர் 13 மற்றும் 14-ம் தேதி ராவல்பிண்டியில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இங்கிலாந்து மகளிர் அணி டி20 தொடரைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னதாக கடைசி நேரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்திருப்பது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும், வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT