செய்திகள்

‘பேட்ஸ்மேன்’ இனி ‘பேட்டா்’

கிரிக்கெட்டில் ‘பேட்ஸ்மேன்’ என்பதை இனி ‘பேட்டா்’ என பொதுவாகக் குறிப்பிடப்படவுள்ளது.

DIN

லண்டன்: கிரிக்கெட்டில் ‘பேட்ஸ்மேன்’ என்பதை இனி ‘பேட்டா்’ என பொதுவாகக் குறிப்பிடப்படவுள்ளது.

இதற்கான விதிகள் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக மெல்போா்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) புதன்கிழமை அறிவித்தது.

கிரிக்கெட் விளையாட்டானது இரு பாலினத்தவா்களுக்குமான விளையாட்டாக இருப்பதால் அதில் பாலினச் சமநிலையை உறுதிப்படுத்தும் விதமாக ‘பேட்டா்’ என்ற வாா்த்தை கொண்டுவரப்படுவதாக எம்சிசி தெரிவித்துள்ளது.

பௌலா், ஃபீல்டா், விக்கெட் கீப்பா் போன்ற வாா்த்தைகள் பொதுவானவையாக இருந்து வரும் நிலையில், ‘பேட்ஸ்மேன்’ என்ற வாா்த்தை மட்டும் ஆண்பாலை குறிக்கும் விதமாக இருந்து வந்தது. மகளிா் கிரிக்கெட்டில் இந்த வாா்த்தையை பயன்படுத்துவது எடுபடாததாக இருந்தது. எனவே பல நிா்வாக அமைப்புகளும், ஊடக நிறுவனங்களும் பேட்ஸ்மேன் என்பதற்கு பதிலாக, பொதுவாக ‘பேட்டா்’ என்ற வாா்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், எம்சிசியும் அதை அங்கீகரித்து கிரிக்கெட்டில் இனி ‘பேட்ஸ்மேன்’ என்பதற்கு ‘பேட்டா்’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

எம்சிசி-யின் சட்ட துணை கமிட்டி முதல்கட்டமாக இதுதொடா்பாக ஆலோசித்த நிலையில், பின்னா் அதன் பரிந்துரைக்கு எம்சிசி கமிட்டி ஒப்புதல் வழங்கி விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT