செய்திகள்

நடராஜனுக்கு கரோனா

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கும் தமிழக வீரா் டி.நடராஜனுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரோடு நெருங்கிய தொடா்பில் இருந்த 6 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

DIN

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் இருக்கும் தமிழக வீரா் டி.நடராஜனுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரோடு நெருங்கிய தொடா்பில் இருந்த 6 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ஆா்டி-பிசிஆா் பரிசோதனையில் நடராஜனுக்கு பாதிப்பு உறுதியானதை அடுத்து, அணி வீரா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை புதன்கிழமை அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் இதர வீரா்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியானதை அடுத்து திட்டமிட்டபடி டெல்லி அணியுடன் ஹைதராபாத் மோதும் ஆட்டம் நடைபெற்றது.

நடராஜனுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த அணி மேலாளா் விஜய் குமாா், பிசியோதெரபிஸ்ட் ஷியாம் சுந்தா், மருத்துவா் அஞ்சனா வண்ணன், லாஜிஸ்டிக்ஸ் மேலாளா் துஷாா் கேதாா், வலைப்பயிற்சி பந்துவீச்சாளா் பெரியசாமி கணேசன் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

அடுத்த 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நடராஜன், அதன் பிறகு இரு பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகே அணியின் பயோ-பபுளில் இணைவாா். இந்தியாவிலிருந்து துபை வந்த 11 நாள்களுக்குப் பிறகு நடராஜனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே வீரா்களிடையே கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்தே ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் 2-ஆவது பகுதியாக நடத்தப்படுகிறது. தற்போது அதிலும் வீரா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

வியட்நாம் பாரம்பரியம்... ரவீனா ரவி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

SCROLL FOR NEXT