முகப்பு
செய்திகள்

சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம்: நடராஜன்

​தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தமிழக வீரர் நடராஜன் அறிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
கோப்புப்படம்
பகிர்:


தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தமிழக வீரர் நடராஜன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் பதிவிட்டுள்ளது:

"எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் (என்சிஜி) எனப் பெயரிடப்படவுள்ளது. கடந்த டிசம்பரில் முதன்முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கினேன். இந்த டிசம்பரில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். கனவுகள் நிஜமாகும். கடவுளுக்கு நன்றி."

யார்க்கர் பந்துகளுக்குப் பெயர்போன நடராஜன் 2020-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலம் மேலும் பிரபலமானார். இதையடுத்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்குத் தேர்வானார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதன்பிறகு, காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →