செய்திகள்

மியாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் சாம்பியன்

அமெரிக்காவின் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.

DIN

அமெரிக்காவின் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த இறுதி போட்டியில் போலந்து நாட்டின் 20 வயதான இகா ஸ்வியாடெக், ஜப்பானின் 24 வயதான நவோமி ஒசாகாவுடன் மோதினார்.

தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒசாகா பின்னர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஸ்வியாடெக் கைப்பற்றினார். 

அதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல், ஸ்வியாடெக் அதிரடி காட்டினார். இதனால் இரண்டாவது செட்டையும் 6-0 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

இதன்மூலம் 17வது முறையாக மியாமி ஓபன் டென்னிஸ் தொடரை  ஸ்வியாடெக் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இது தொடர்ச்சியாக அவர் பெற்ற 17வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ட்வின்ஸ்... ஆஷிகா ரங்கநாத்!

கோவை பாலியல் வன்கொடுமை: இன்றும் நாளையும் பாஜக ஆர்ப்பாட்டம்! - நயினார் நாகேந்திரன்

பூ அல்ல... நான்... தனிஷ்க் திவாரி!

எப்போதும் உள்ளூர்க்காரி... அபர்ணா தீட்சித்!

ஐஸ் கிரீம் கேர்ள்... அதிதி புத்ததோகி!

SCROLL FOR NEXT