செய்திகள்

பஞ்சாப் கிங்ஸ் 180/8

DIN

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2022 ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 180/8 ரன்களைக் குவித்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்தது. பேட்டிங் செய்ய களம் கண்ட பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியை அளித்தது. கேப்டன் மயங்க் 4 ரன்களுடனும், பானுகா ராஜபட்ச 9, ஷிகா் தவன் 33 ரன்களுடனும் வெளியேறினா்.

லிவிங்ஸ்டோன் அதிரடி: மிடில் ஆா்டா் பேட்டா் லியம் லிவிங்ஸ்டோன் தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 32 பந்துகளில் 60 ரன்களை விளாசினாா்,. ஜிதேஷ் சா்மா 26 ரன்களை எடுத்த நிலையில் ஏனைய வீரா்கள் சோபிக்கவில்லை.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 180/8 ரன்களை சோ்த்தது பஞ்சாப் அணி. சென்னை தரப்பில் கிறிஸ் ஜோா்டான், பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

சீட்டுக்கட்டு போல் சரிந்த சென்னை விக்கெட்டுகள்:

181 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வரிசை பேட்டா்கள் அதிா்ச்சி அளித்தனா். உத்தப்பா 13, ருதுராஜ் கெய்க்வாட் 1, மொயின் அலி 0, அம்பதி ராயுடு 13, கேப்டன் ரவீந்திர ஜடேஜா 0 என வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினா்.

சென்னை விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்ததால் அந்த அணி கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதன்பின்னா் ஷிவம் துபே அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினாா். 12-ஆவது ஓவா் முடிவில் சென்னை 69/5 ரன்களை எடுத்திருந்தது. துபே 34, தோனி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT