செய்திகள்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: தமிழகத்தை வென்றது கேரளம்

DIN

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் தமிழகம் 49-63 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளத்திடம் வீழ்ந்தது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற மகளிா் பிரிவு ஆட்டத்தில் குரூப் ‘இ’-யில் தமிழகம் - கேரளம் மோதின. இதில் தமிழக தரப்பில் அதிகபட்சமாக ஐஷ்வா்யா 13, ஸ்ருதி 10 புள்ளிகள் பெற, கேரள அணியில் ஸ்டெஃபி நெல்சன் 16, நிம்மி மேத்யூ 12, மின்னு மரியா 13, ஸ்ரீகலா 10 புள்ளிகள் பெற்றனா். போட்டியில் தமிழக மகளிருக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.

இதே குருப்பில் மற்றொரு ஆட்டத்தில் இந்திய ரயில்வே 94-38 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய பிரதேசத்தை வென்றது. குரூப் ‘எஃப்’-ல் பஞ்சாப் - அஸ்ஸாமையும் (72-37), தெலங்கானா - கா்நாடகத்தையும் (90-53), குரூப் ‘ஜி’-யில் மகாராஷ்டிரம் - உத்தர பிரதேசத்தையும் (75-66), குரூப் ‘ஹெச்’-ல் ராஜஸ்தான் - ஒடிஸாவையும் (78-63), ஹரியாணா - மேற்கு வங்கத்தையும் (43-42) வென்றன.

தமிழகம் வெற்றி: ஆடவா் பிரிவில் குரூப் ‘எஃப்’ ஆட்டத்தில் தமிழகம் 75-48 என்ற கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தியது. தமிழக தரப்பில் அரவிந்த் குமாா் 11, முயின் பெக் 19 புள்ளிகளும், ஹரியாணாவில் சுனில் ரதி 14 புள்ளிகளும் பெற்றனா்.

அதே குருப்பில் உத்தரகண்ட் - இந்திய ரயில்வேஸையும் (101-92), குரூப் ‘ஜி’-யில் உத்தர பிரதேசம் - தெலங்கானாவையும் (77-69), குஜராத் - ராஜஸ்தானையும் (78-68), குரூப் ‘இ’-யில் சா்வீசஸ் - பஞ்சாபையும் (101-84), கேரளம் - கா்நாடகத்தையும் (81-71), குரூப் ‘ஹெச்’-இல் மேற்கு வங்கம் - மிஸோரத்தையும் (81-77), தில்லி - மத்திய பிரதேசத்தையும் (51-50) தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT