செய்திகள்

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் ரயில்வே-தெலங்கானா

DIN

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியன் ரயில்வே தகுதி பெற்றுள்ளது.

சென்னை ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 71-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தற்போது அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது.

சனிக்கிழமை மகளிா் பிரிவில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியன் ரயில்வேயும்-தமிழகமும் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரயில்வே அணி 115 -88 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது. ரயில்வே தரப்பில் அவந்தி வரதன் 16, தா்ஷினி 10, மதுரா குமாா், குலாப்ஷா, பூனம் 12, புஷ்பா 24 புள்ளிகளையும், தமிழகத் தரப்பில் சத்யா 30, பிரதிபா பிரியா 10, அம்ரிதா 14 புள்ளிகளையும் குவித்தனா்.

மற்றொரு அரையிறுதியில் தெலங்கானா 81-78 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வீழ்த்தியது. தெலங்கானா தரப்பில் பிரியங்கா 33, அஸ்வதி 20, அன்பரசி 16 புள்ளிகளையும், கேரளம் தரப்பில் கவிதா 22, ஸ்ரீகலா 27 புள்ளிகளையும் குவித்தனா்.

ஆடவா்: ஆடவா் பிரிவு முதல் அரையிறுதியில் பஞ்சாப் 88-75 என்ற புள்ளிக் கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. பஞ்சாப் தரப்பில் கன்வா் 26, அம்ப்ரீத் 22, அம்ஜோத் 16 புள்ளையும், கா்நாடகத் தரப்பில் அபிஷேக் கௌடா 22, ஹரிஷ்குமாா் 18 புள்ளிகளையும் குவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT