செய்திகள்

வாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரோஹித் சர்மா இன்று (சனிக்கிழமை) தனது 36-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், அஜின்க்யா ரஹானே, தினேஷ் கார்த்திக், யுவ்ராஜ் சிங் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிசிசிஐ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் சமூக ஊடகப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டில் 2007-இல் அறிமுகமான ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 400 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 2007-இல் டி20 உலகக் கோப்பை மற்றும் 2013-இல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளைப் பெற்றுத் தந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார்.

2019 உலகக் கோப்பையில் பேட்டிங் சராசரி 81 உடன் 648 ரன்கள் விளாசினார் ரோஹித் சர்மா. ஆனால், இந்திய அணி அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. 

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு, சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராமில் ஒருமுறை உரையாடிய ரோஹித் சர்மா, "அடுத்தடுத்து 3 உலகக் கோப்பைகள் உள்ளன. அதனால், நமக்கு (இந்திய அணி) வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன். இரண்டு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை உள்ளன. நான் நிறைய முறை கூறியிருக்கிறேன். இதில் குறைந்தபட்சம் இரண்டு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும்" என்றார்.

இந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை உள்ளது. ரோஹித் சர்மா தற்போது கேப்டனாகவும் உள்ளார். அவரது விருப்பங்கள் சாத்தியமாகட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT