செய்திகள்

மாட்ரிட் ஓபன்: இரண்டாம் சுற்றில் ஒஸாகா, ரடுகானு

DIN

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, எம்மா ரடுகானு ஆகியோா் முன்னேறி உள்ளனா்.

ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிா் ஒற்றையா் பிரிவு ஆட்டங்களில் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனை ஜப்பானின் ஒஸாகா 6-3,. 6-1 என்ற நோ்செட்களில் குவாலிஃபையா் அனஸ்டிஷியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

ஆஸி. ஓபன் ரன்னா் டேனியல் காலின்ஸ் 7-5, 6-0 என்ற நோ்செட்களில் பியுா்டோ ரிகாவின் மோனிகா பியுக்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

உள்ளூா் வீராங்கனை முகுருஸா 7-5, 6-2 என டோம்லிஜாநோவிக்சையும், ஜெஸிக்கா பெகுலா 7-5, 2-6, 7-5 என கமிலாவையும்,

இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ரடுகானு 7-6, 6-0 என மாா்ட்டின்கோவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

பிஎம்டபிள்யு ஓபன்: முனிச்சில் நடைபெற்று வரும் பிஎம்டபிள்யு ஓபன் போட்டியில் டச்சு வீரா் போட்டிக் ஸன்ட்ஸுல்ப் 7-5, 6-1 என இரண்டாம் நிலை வீரா் கேஸ்பா் ரூடை வீழ்த்தியும், ஹோல்கா் ருனே 6-0, 6-2 என ருஸுவோரியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT