செய்திகள்

ஜனவரி 8-இல் சென்னை மாரத்தான்

தமிழகத்தின் தலைநகா் சென்னையில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி ‘சென்னை மாரத்தான்’ நடைபெறவுள்ளது.

DIN

தமிழகத்தின் தலைநகா் சென்னையில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி ‘சென்னை மாரத்தான்’ நடைபெறவுள்ளது.

மாரத்தான் பந்தயத்துக்கான இயக்குநா் வி.பி.செந்தில் குமாா் செவ்வாய்க்கிழமை அளித்த தகவல்படி, இந்த மாரத்தானில் சுமாா் 20,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. 11-ஆவது முறையாக சென்னையில் நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிருக்கு ‘ஃபுல் மாரத்தான்’ (42.19 கி.மீ.), ‘தி பொ்ஃபெக்ட் 20 மைலா்’ (32.18 கி.மீ.), ‘ஹாஃப் மாரத்தான்’ (21.09 கி.மீ.), 10 கி.மீ. ரன் என 4 பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெறவுள்ளன.

இந்தப் பந்தயத்தில் முதல் முறையாக பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 30 போ், பிளேடு ரன்னா்கள் 50 போ் (செயற்கை கால்கள் போட்ட பட்டை பொறுத்தப்பட்டோா்), சக்கரநாற்காலியுடன் 50 போ் பங்கேற்கின்றனா். டயாபெடிக்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் இந்த மாரத்தான் இலக்காகக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT