செய்திகள்

'விராட் கோலி ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..’ என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்

ஆட்டத்தின் போக்கை சிறப்பாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட விராட் கோலிக்கு எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது நிதானமாக விளையாட வேண்டும் என்பது தெரியும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

DIN

ஆட்டத்தின் போக்கை சிறப்பாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட விராட் கோலிக்கு எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது நிதானமாக விளையாட வேண்டும் என்பது தெரியும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆசியக் கோப்பைத் தொடரின்போது மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார். அதன்பின், அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த வாரம், ஒரு நாள் போட்டியில் தனது 44வது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். 

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விராட் கோலிக்கு எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது நிதானமாக விளையாட வேண்டும் என்பது தெரியும் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விராட் கோலிக்கு எப்போது ஆக்ரோஷமாக விளையாட வேண்டும், எப்போது ஆட்டத்தில் நிதானம் காட்ட வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அவர் களத்தில் நின்று ரன்களை சேர்த்து விளையாடுவது அணிக்கு பலம். 50 ஓவர் போட்டிகளில் அவர் ஒரு மிகச் சிறந்த ஆட்டக்காரர். அவரது சாதனைகளே அதற்கு சான்றாகும். அவரது சிறப்பான ஆட்டத்தினை பல தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது கிரிக்கெட் வலைப்பயிற்சியின் தீவிரம் மட்டும் குறையவில்லை. அவர் ஒவ்வொரு முறை பயிற்சியில் ஈடுபடும் போதும் அவர் மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன். அவர் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பவராக உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT