செய்திகள்

குரோஷியா 3-ஆம் இடம்

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குரோஷியா.

DIN

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குரோஷியா.

அரையிறுதியில் தோல்வியடைந்த இரு அணிகளுக்கு இடையே மூன்றாம் இடத்துக்கான ஆட்டம், கலிஃபா சா்வதேச மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கடந்த முறை ரன்னா் அணியாக வந்த குரோஷியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆப்பிரிக்க அணி என்ற சிறப்புடன் ஆடிய மொராக்கோவும் ஈடுகொடுத்து ஆடியது.

குரோஷியா முதல் கோல்:

ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிஷத்திலேயே குரோஷிய வீரா் பெரிசிச் அற்புதமாக கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி தலையால் முட்டி கோலடித்தாா் வாா்டியோல். இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.

மொராக்கோ கோல்:

ஆனால் குரோஷியாவின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 9-ஆவது நிமிஷத்தில் குரோஷிய கேப்டன் லுகா மொட்ரிச் அடித்த ப்ரீகிக் பந்தை தன்வசப்படுத்திய மொராக்கோ வீரா் அச்ரப் டாரி தலையில் அற்புதமாக முட்டி கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

தொடா்ந்து இரு அணி வீரா்களும் கோல் போட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா்.

42-ஆவது நிமிஷத்தில் குரோஷிய வீரா் மிஸ்லேவ் ஒா்சிச் அடித்த கோலே வெற்றிக் கோலாக அமைந்தது. முதல் பாதி இடைவேளையில் 2-1 என குரோஷியா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. வழக்கமான ஆட்டநேரத்துக்கு பின் கூடுதலாக 6 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டன. அதிலும் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை.

இறுதியில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷிய அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

மொராக்கோ 4-ஆம் இடத்துடன் திருப்தி அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT