செய்திகள்

100-வது டெஸ்டில் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்டை விளையாடும் டேவிட் வார்னர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இரு நாள்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்ஸிங் டே டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

இந்த டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மோசமாக பேட்டிங் செய்ததால் முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. அணி 68.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32, லபுஷேன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர், 144 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இதன்மூலம் 100-வது டெஸ்டில் சதமடித்த 10-வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 177, ஸ்மித் 84 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டா்: சொந்த செலவில் வழங்கினாா் அமைச்சா் காந்தி

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

SCROLL FOR NEXT