செய்திகள்

தோனி மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி! வைரல் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி பரிசளித்துள்ளார்.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி பரிசளித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்று சாதனை படைத்தது. மெஸ்ஸி கேப்டனாக பொறுப்பேற்று முதல்முறையாக கோப்பை வென்றது ஆர்ஜெண்டீனா.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட ஆர்ஜென்டீனா அணியின் டீ-சர்ட்டை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார்.

அந்த டீ-சர்ட்டை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் குறிப்பிட்டுள்ளார். டீ-சர்ட்டில் பாரா ஜீவா என எழுதப்பட்டு அதற்கு கீழ் மெஸ்ஸி கையெழுத்திட்டுள்ளார்.

ஜிவாவின் இன்ஸ்டா பதிவை தோனி மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT