சஹால் - கோலி 
செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 15 கோடி வேண்டாம், ரூ. 8 கோடியே போதும்: பிரபல வீரரின் விருப்பம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் எனப் பிரபல வீரர் சஹால் கூறியுள்ளார்.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் இடம்பெற வேண்டும் எனப் பிரபல வீரர் சஹால் கூறியுள்ளார்.

31 வயது சஹால், இந்திய அணிக்காக 2016 முதல் 59 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2014 முதல் ஆர்சிபி அணியில் விளையாடியுள்ளார். ஆர்சிபி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி 138 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 7.50. ஐபிஎல் போட்டியில் ஒரு பருவத்தில் 13 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் எடுத்த பிறகு 2016-ல் இந்திய அணிக்குத் தேர்வானார். 

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு சஹால் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் ஏலத்தில் எனக்கு ரூ. 15 கோடி கிடைக்க வேண்டும் எனக் கூறமாட்டேன். ரூ. 8 கோடியே எனக்குப் போதுமானது. 

விராட் கோலி எனக்கு மூத்தவர். ஆர்சிபியில் நான் இருந்த 8 வருடங்களும் எங்களிடையே அருமையான சகோதரப் பாசம் நிலவியது. மைதானத்தில் மட்டுமல்ல அதன் வெளியேயும் அவரிடம் என்னால் என்ன வேண்டுமானாலும் கேட்க முடியும். அந்த நட்பினால் அவருடைய தலைமையின் கீழ் என்னால் சிறப்பாகப் பந்து வீச முடிந்தது.

ஆர்சிபி அணியில் விளையாடிய கடந்த 8 வருடங்களும் மறக்க முடியாதவை. இந்தமுறை என்னை எந்த அணி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஒரு தொழில்முறை வீரராக எந்த அணியிலும் விளையாட நான் தயாராக இருக்க வேண்டும். ஆர்சிபி அணிக்கு மீண்டும் செல்ல விருப்பப்படுகிறேன். ஆனால் வேறொரு அணி என்னைத் தேர்வு செய்தால் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். ஆர்சிபி அணியில் நன்கு விளையாடியதால் தான் இந்திய அணிக்கு நான் தேர்வானேன். என் திறமையை நிரூபிக்க அந்த அணி எனக்கு உதவியுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT