செய்திகள்

15 ஆயிரம் ரூபாய்க்கு 15 பீட்சா: பூரன் கொடுத்த மிரட்டல் பார்ட்டி

ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 10.75 கோடிக்குத் தேர்வானதைக் கொண்டாடும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு நிகோலஸ் பூரன் பீட்சா விருந்து கொடுத்துள்ளார்.

DIN


ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 10.75 கோடிக்குத் தேர்வானதைக் கொண்டாடும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு நிகோலஸ் பூரன் பீட்சா விருந்து கொடுத்துள்ளார்.

இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்கான மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 தொடரில் விளையாடுவதற்காக இரு அணிகளும் கொல்கத்தாவில் உள்ளன.

இதனிடையே கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகளின் நிகோலஸ் பூரன் ரூ. 10.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி 85 ரன்கள் மட்டுமே எடுத்தபோதிலும் அவர் பெரிய தொகைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைக் கொண்டாடும் வகையில், மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் அனைவருக்கும் நிகோலஸ் பூரன் பீட்சா விருந்து வைத்துள்ளார். பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், தங்கியிருக்கும் விடுதியிலேயே பீட்சா வாங்கியிருக்கிறார் பூரன். அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியே வீரர்களிடம் பீட்சா கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த 15 பீட்சாவுக்கு பூரன் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT