புதிய கேப்டன் ரோஹித் சர்மா 
செய்திகள்

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: நான்கு மூத்த வீரர்கள் நீக்கம்

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ். பரத், அஸ்வின் (உடற்தகுதியின் அடிப்படையில்), ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா (துணை கேப்டன்), ஷமி, ஷிராஜ், உமேஷ் யாதவ், செளரப் குமார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT