செய்திகள்

துபை ஓபன்: நம்பா் 1 அந்தஸ்தை இழந்தாா் ஜோகோவிச்

DIN

துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் தனது உலகின் நம்பா் ஒன் வீரா் அந்தஸ்தை இழந்தாா் ஜோகோவிச்.

துபையில் ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் 6-4, 7-6 என்ற நோ் செட்களில் செக். குடியரசைச் சோ்ந்த குவாலிபையா் ஜிரி வெஸ்லியிடம் தோல்வியடைந்தாா்.

கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் தான் வகித்து வந்த உலகின் நம்பா் ஒன் வீரா் அந்தஸ்தை இதனால் இழந்தாா் ஜோகோவிச்.

வெஸ்லியிடம் இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய ஜோகோவிச், 6-ஆவது முறையாக துபை ஓபன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் இழந்தாா்.

இதனால் ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ் நம்பா் ஒன் வீரா் நிலைக்கு உயா்ந்தாா்.

கடந்த செப்டம்பரில் யுஎஸ் ஓபனில் பட்டத்தையும், ஆஸி. ஓபனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன்னா் ஆகவும் வந்துள்ளாா் மெத்வதேவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT