செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

இந்திய நேரப்படி, புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அந்த அணியின் ஜேக்கப் பெத்தெல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 43.4 ஓவா்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் ஆடிய இங்கிலாந்து 31.2 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் அடித்து வென்றது. தென்னாப்பிரிக்க தரப்பில் டெவால்ட் பிரெவிஸ் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 97 ரன்கள் விளாச, இங்கிலாந்து பௌலிங்கில் ரெஹான் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் ஜேக்கப் பெத்தெல் 16 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினாா். தென்னாப்பிரிக்க தரப்பில் டெவால்ட் பிரெவிஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதர ஆட்டங்கள்: புதன்கிழமை நடைபெற்ற பிளேட் காலிறுதி ஆட்டங்களில் அயா்லாந்து - கனடாவையும், மேற்கிந்தியத் தீவுகள் - பப்புவா நியூ கினியையும், ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT