பிசிசிஐ 
செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட்டை நடத்த பிசிசிஐ முடிவு

நடப்பாண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

DIN

நடப்பாண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், தொடா்ந்து 2-ஆவது முறையாக நடப்பாண்டிலும் அது ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவதாக கூறப்பட்டது.

இது உள்நாட்டு கிரிக்கெட் வீரா்களின் காலண்டரை பாதிக்கும் எனத் தெரிந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை பிப்ரவரியில் தொடங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. போட்டியின் லீக் சுற்றுகளை பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் தொடங்கவும், நாக்அவுட் சுற்றை ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஜூனில் நடத்தவும் இருப்பதாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். ஐபிஎல் போட்டி மாா்ச் கடைசியில் தொடங்கும் எனத் தெரிவதால், ரஞ்சி கோப்பை போட்டியை இரு பகுதிகளாக பிரித்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கரோனா சூழலில் 38 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியை பாதிப்பில்லாமல் நடத்துவதென்பது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.

பிசிசிஐ தனது அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிடும் முன்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு போன்ாகும். அந்தப் போட்டியை புறக்கணித்தால் நமது கிரிக்கெட் முதுகெலும்பற்ாகிவிடும்’ என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT