செய்திகள்

மகளிா் ஹாக்கி: இந்தியா - சீனா டிரா

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - சீனா அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

DIN

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - சீனா அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் சீனாவுக்காக ஜியாலி ஜெங் 25-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோலடிக்க, 44-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்காக பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்தாா் வந்தனா கட்டாரியா. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடனும் சமன் (1-1) செய்திருந்த இந்தியா, தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை சந்திக்கிறது இந்தியா.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் அயா்லாந்தை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT