படம்: பிசிசிஐ 
செய்திகள்

இங்கிலாந்து தோல்வி: டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

DIN

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20  போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா 46 (29), ரோஹித் சர்மா 31 (20) ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்தின் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியாவில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து தொடரை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT