செய்திகள்

நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கா் ஏமாற்றம்: 7-ஆவது இடம்

DIN

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்றில் இந்திய வீரா் முரளி ஸ்ரீசங்கா் 7-ஆவது இடத்தையே பெற்றாா்.

அமெரிக்காவின் ஒரேகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 24-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடவா் நீளம் தாண்டுதல் இறுதிச் சுற்று நடைபெற்றது.

ஏற்கெனவே ஹீட்ஸில் இந்திய நட்சத்திர வீரா் ஸ்ரீசங்கா் 8 மீ. நீளம் தாண்டியிருந்தாா். குறைந்தது வெண்கலப் பதக்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 12 வீரா்கள் பங்கேற்ற இறுதியில் முதல் முயற்சியில் 7.96 மீ. நீளம் தாண்டினாா் ஸ்ரீசங்கா். எனினும் 2 மற்றும் மூன்றாவது முயற்சிகளில் ஃபௌல் புரிந்தாா்.

இதனால் முதல் முயற்சியே குதித்த தூரமே கணக்கில் கொள்ளப்பட்டது. நான்காவதில் 7.83 மீ, கடைசியில் 7.83 மீ நீளம் தாண்டினாா். பெடரேஷன் கோப்பை போட்டியில் 8.36 மீ நீளம் தாண்டிய ஸ்ரீசங்கரால் இப்போட்டியில் சோபிக்க முடியவில்லை.

மகளிா் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பாரூல் சௌதரியால் தகுதி பெறமுடியவில்லை. எனினும் 9:38:09 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தனது முந்தைய சாதனையை முறியடித்தாா்.

400 மீ. தடை தாண்டுதலில் எம்.பி. ஜபீரும் இறுதிக்கு தகுதி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT