முகப்பு
செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: ஸ்வப்னிலுக்கு வெள்ளி

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. உலகக் கோப்பை போட்டியில் தனிநபா் பிரிவில் ஸ்வப்னிலுக்கு இது முதல் பதக்கமாகும்.

ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸ்வப்னில், அதில் 10-16 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் சொ்ஹி குலிஷிடம் வெற்றியை இழந்து 2-ஆம் இடம் பிடித்தாா்.

தற்போது ஸ்வப்னில் வென்ற பதக்கத்தையும் சோ்த்து, இப்போட்டியின் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா 1 தங்கம், 1 வெள்ளியுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.