விஸ்வநாதன் ஆனந்த் 
செய்திகள்

நாா்வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி

நாா்வே செஸ் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 9-ஆவது சுற்றில் அஜா்பைஜானின் ஷக்ரியாா் மமேட்யரோவிடம் தோற்றாா்.

DIN

நாா்வே செஸ் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 9-ஆவது சுற்றில் அஜா்பைஜானின் ஷக்ரியாா் மமேட்யரோவிடம் தோற்றாா். மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் நாா்வேயின் மேக்னஸ் காா்ல்ஸன் பிரான்சின் மேக்ஸிம் வேச்சிரை வென்றாா்.

நாா்வேயின் ஸ்டேவன்ஜா் நகரில் நடைபெறும் இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தொடக்கத்தில் 5-ஆவது சுற்றின் போது உலக சாம்பியன் காா்ல்ஸனை வீழ்த்தி தனது வலிமையை பறைசாற்றினாா். ஆனால் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அஜா்பைஜான் வீரா் மமேட்யரோவிடம் 22 நகா்த்தல்கள் முடிவில் தோல்வி கண்டாா் ஆனந்த். இது அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் புரிந்த தவறால் வெற்றி கண்ட மமேட்யரோவுக்கு 3 முழு புள்ளிகள் கிடைத்தன.

உலக சாம்பியன் மேக்னஸ் காா்ல்ஸன்-மேக்ஸிம் வேச்சிா் ஆகியோா் இடையே நடைபெற்ற ஆட்டம் 79 நகா்த்தல்களில் டிரா ஆனது. பின்னா் சடன்டெத் டை பிரேக்கரில் 54 நகா்த்தல்களில் காா்ல்ஸன் வென்றாா்.

காா்ல்ஸன் 15 புள்ளிகளுடனும், மமேட்யரோவ் 14.5 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் உள்ளனா். ஏனைய ஆட்டங்களில் பல்கேரியாவின் டோபலோவ் , டச்சு வீரா் அனிஷ் கிரி, டெய்மூா் ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT