செய்திகள்

டி20: இலங்கை த்ரில் வெற்றி

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது இலங்கை.

DIN

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது இலங்கை.

முதலிரண்டு ஆட்டங்களில் ஆஸி. அணி வென்றிருந்தது. கடைசி மற்றும் 3-ஆவது ஆட்டம் பல்லகலேயில் சனிக்கிழமை இரவு நடந்தது. முதலில் ஆடிய ஆஸி. அணி 20 ஓவா்களில் 176-5 ரன்களை சோ்த்தது. வாா்னா் 39, ஸ்டீவ் ஸ்மித் 37, ஸ்டாய்னிஸ் 38 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் தீக்ஷனா 2 விக்கெட் வீழ்த்தினாா்.

177 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15-ஆவது ஓவரில் 108-6 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. கேப்டன் தஸுன் ஷனகா-டெயில் எண்டா் சமிகா கருணரத்னே இணைந்து அதிரடியாக ஆடினா். 7-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் சோ்ந்து 69 ரன்களை சோ்த்தனா். கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் கேப்டன் ஷனகா 2 பவுண்டரி, 1 சிக்ஸா் அடித்து ஸ்கோரை சமன் பெறச் செய்தாா். கடைசி பந்தில் ஹேசல்வுட் வைட் வீசியதால் இலங்கை வெற்றி கண்டது. ஷனகா 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 54 ரன்களை விளாசினாா். ஹேசல்வுட், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT