செய்திகள்

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்த இலங்கை (ஹைலைட்ஸ் விடியோ)

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இலங்கை அணி.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என ஆஸி. அணி வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. அடுத்த இரு ஆட்டங்களையும் இலங்கை வென்றது. இதனால் 4-வது ஒருநாள் ஆட்டத்தின் முடிவை அறிய ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள்.

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 49 ஓவர்களில் 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சரித் அசலங்கா 110 ரன்களும் தனஞ்ஜெயா டி சில்வா 60 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸி. அணி 50 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வார்னர் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வெற்றியால் ஒருநாள் தொடரை 3-1 என வென்றுள்ளது இலங்கை அணி.  

1992-க்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை வெல்ல முடியாமல் இருந்த இலங்கை அணி, 30 வருடங்களில் முதல்முறையாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT