செய்திகள்

புரோ லீக் ஹாக்கி: அமெரிக்காவை வென்றது இந்தியா

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, அமெரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் புதன்கிழமை வென்றது.

DIN

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, அமெரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் புதன்கிழமை வென்றது.

முன்னதாக, முதல் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை 4-2 என்ற கணக்கில் வென்ற இந்தியா, 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தியது.

புதன்கிழமை ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் வந்தனா கட்டாரியா 38-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்தாா். தொடா்ந்து 53-ஆவது நிமிஷத்தில் அவரும், சோனிகாவும் தலா 1 ஃபீல்டு கோல் அடித்தனா். இறுதியாக சங்கீதா குமாரி 56-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது.

புரோ லீக் போட்டி பட்டியலில் இந்தியா தற்போது 14 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பதிவு செய்து 30 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT