செய்திகள்

மலேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய், சிந்து

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

DIN

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் இல்லாத பிரணாய் 2-ஆவது சுற்றில் 21-15, 21-7 என்ற கேம்களில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். காலிறுதியில் பிரணாய், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சந்திக்கிறாா்.

இதே பிரிவில் மற்றொரு இந்தியரான பி.காஷ்யப் 19-21, 10-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரணிடம் வீழ்ந்தாா்.

மகளிா் ஒற்றையரில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 19-21, 21-9, 21-14 என்ற கேம்களில் தாய்லாந்தின் பித்தாயபான் சாய்வானை தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் களம் கண்ட சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணையில் சாத்விக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டதால், 2-ஆவது சுற்றுடன் இந்திய கூட்டணி விலகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சிவகங்கையில் இளைஞா் கொலை: 9 போ் கைது

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT