செய்திகள்

2-வது டெஸ்டில் வெற்றி: சாதனையைத் தக்கவைத்த தென்னாப்பிரிக்கா!

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டை 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைச் சமன் செய்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 133 ஓவர்களில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எர்வீ 108 ரன்கள் எடுத்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் 60, காலின் டி கிராண்ட்ஹோம் 120 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா 5 விக்கெட்டுகளையும் யான்சென் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தென்னாப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் கைல் வெர்ரீன் 136 ரன்களும் ரபாடா 47 ரன்களும் எடுத்தார்கள். இதனால் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 426 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த அணி 4-ம் நாள் முடிவில் 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது. கான்வே 60 ரன்களுடனும் டாம் பிளெண்டல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். 2-வது டெஸ்டில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்குக் கைவசம் 6 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 332 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 

இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கான்வே 92, பிளெண்டல் 44 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா, யான்சென், மஹாராஹ் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடைசி நாளில் 61 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி. 

2-வது டெஸ்டை 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த டெஸ்டில் மகத்தான முறையில் விளையாடி ஜெயித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கும் தொடர் நாயகன் விருது நியூசிலாந்தின் மேட் ஹென்றிக்கும் வழங்கப்பட்டன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை தோல்வியடைந்ததேயில்லை. அந்தச் சாதனையை இந்தமுறையும் தக்கவைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT