இலங்கையுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி டிக்ளேர் செய்ததன் பின்னணியிலுள்ள திட்டத்தை ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் விளாசினார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிக்க | அசார் அலியும் சதம்: பாக். அபார பேட்டிங்
இதன்பிறகு, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜடேஜா டிக்ளேர் திட்டம் பேசியதாவது:
"அணி ஓய்வறையிலிருந்து செய்திகள் வந்தபோது, பந்து எழாமல் வரத் தொடங்கிவிட்டது என்றும் திரும்பத் தொடங்கிவிட்டது என்றும் நானும் அவர்களிடம் கூறினேன். களத்தில் சில நிகழ்வுகள் ஏற்படத் தொடங்கிவிட்டதால், அவர்களை பேட்டிங் செய்ய அனுப்புவது சரியாக இருக்கும் என நான் செய்தி அனுப்பினேன். ஒன்றரை நாள் பீல்டிங் செய்ததால், அவர்களது பேட்டர்கள் சோர்வாக இருப்பார்கள்.
நீண்ட நேரம் களத்திலிருந்து பெரிய ஷாட்களை ஆடுவது அவர்களுக்கு எளிதானதாக இருக்காது. முடிந்தளவுக்கு துரிதமாக ரன் குவித்து, டிக்ளேர் செய்தால், சோர்வடைந்துள்ள அவர்களது பேட்டர்களுக்கு பேட்டிங் செய்ய எளிதாக இருக்காது என்பதுதான் திட்டம்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.