செய்திகள்

ரூட் சதம்: மே.இ. தீவுகள், இங்கிலாந்து முதல் டெஸ்ட் டிரா

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா இடையே ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

DIN


மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா இடையே ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஆன்டிகுவாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஜானி பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் போனர் அடித்த சதத்தால் 375 ரன்கள் குவித்தது.

64 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது.

5-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை விளையாடிய இங்கிலாந்து 132 ரன்கள் கூடுதலாக சேர்த்தது. கேப்டன் ஜோ ரூட் சதமடித்தார்.

இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் கடைசி இரண்டு செஷன்களுக்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

70.1 ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆட்டநாயகன் விருதை மேற்கிந்தியத் தீவுகளின் போனர் தட்டிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT