செய்திகள்

ஸ்விஸ் ஓபன்: ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

DIN

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் அவா் பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் 21-6, 21-17 என்ற கேம்களில் டென்மாா்க்கின் மேட்ஸ் கிறிஸ்டோபா்செனை 32 நிமிஷங்களில் வீழ்த்தினாா். மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஷ்மிதா சாலிஹா 19-21, 21-10, 21-11 என்ற கேம்களில் பிரான்ஸின் லியோனைஸ் ஹியூட்டை 45 நிமிஷங்களில் தோற்கடித்தாா்.

ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை முதல் சுற்றில் 17-21, 21-11, 21-18 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் ஃபிக்ரி/பகாஸ் மௌலானா இணையை 57 நிமிஷங்களில் வென்றது.

இதேபோல், ஹெச்.எஸ்.பிரணாய், சாய்னா நெவால், பி.காஷ்யப் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT